ஆசிரியரால் பாலியல் தொல்லைகள்- அவிழும் உண்மைகள் !

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது தற்போது அடுத்தடுத்து வன்கொடுமை புகாரை மாணவ மாணவிகள் தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த புகார்கள் அனைத்தும் பாடகி சின்மயி மற்றும் மாடல் கிருபாலி ஆகியோரால் தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்து விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மாடல் கிருபாலி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி, மாணவர்களை தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்படி, நிறைய மாணவர்கள் தங்களின் மோசமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி) பள்ளியின் ராஜகோபாலன் (Commerce) என்ற ஆசிரியர் பணிபுரிந்து வந்துள்ளார்.

மே 23 அன்று, பி.எஸ்.பி.பி பள்ளியின் முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள் தங்களின் ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து பல மாணவர்கள் அடுத்தடுத்து புகார் அளித்துள்ள நிலையில், குறித்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், குறித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் இப்பதிவினை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


இதில் ஒரு மாணவி பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில் அந்த ஆசிரியர் ஆன்லைன் வகுப்புக்கு வெறும் டவல் அணிந்து வருவார் என்று கூறியதுடன் அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.அதைத்தொடர்ந்து ஒரு மாணவி, ராஜகோபாலன் தகாத கருத்துக்களை கூறுவது, தகாத முறையில் தொடுவது மற்றும் திரைப்படங்களுக்கு வரும்படி கேட்பது என அநாகரிகமாக நடந்துகொள்வார் என கூறியுள்ளார்.

மேலும், ராஜகோபாலன் வகுப்பு வாட்ஸ் அப் குழுவில் ஒரு ஆபாச இணைப்பைப் பகிர்ந்து கொண்டார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்து டீனிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மாணவிகள் மட்டுமல்லாது ஒரு மாணவனும் தனது அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், அந்த ஆசிரியர் தான் செல்போன் கொண்டுவந்ததாக பொய் புகார் கூறி அவரது அந்தரங்க பகுதியை தொட்டதாக புகார் அளித்துள்ளார்.இவ்வளவு புகார்கள் பள்ளியின் மேல் இடத்திற்கு சென்று எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், இப்பள்ளியின் மேலாளர் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி எனக் கூறப்பட்டு வந்தது.

தற்போது இது குறித்து ஒய்ஜி மகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அந்த பள்ளியை நானோ, எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை என்றும், நான் பள்ளியில் ஒரு டிரஸ்டி தான் என்றும் எனது தம்பி மனைவியும் தம்பியும் தான் வழி நடத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது விழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் பள்ளி டிரஸ்டி என்ற முறையில் ஒய்.ஜி மகேந்திரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் பதிவிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. 


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad