13 வயது சிறுமியை 4 மாத கர்ப்பமாக்கிய பெரியப்பா.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய பெரியப்பா உறவு முறை கொண்ட நபரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய பெரியப்பா உறவு முறை கொண்ட நபரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது புரசைவாக்கம் பகுதியை சார்ந்த பெரியப்பா உறவு முறை கொண்ட விஸ்வநாதன் (46) என்பவர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் மிரட்டியதாக கூறினார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உடனடியாக வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தனது மகள் முறை கொண்ட சிறுமியை கடந்த ஒரு வருட காலமாக கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனால் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாகி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.