150அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை. மீட்பு பணி தீவிரம்.

இந்தியாவின் ஆக்ரா அருகே உள்ள கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தாராயாய் கிராமத்தில் இன்று காலை திங்கட்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, தந்தை தோண்டிய 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 5 வயது குழந்தை தவறுதலாக விழுந்துள்ளது.

ஆழ்துறை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார் எங்கள் கேள்விகளுக்கு குழந்தை பதிலளித்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.
Tags

Top Post Ad

Below Post Ad