காதலனுடன் உல்லாசம்:பெற்ற மகளை கொன்று புதைத்த கொடூர தாய்!

விசாகப்பட்டினத்தின் மரிக்கவலசம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் வரலட்சுமி, இவரது கணவர் ரமேஷ், கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்து வாழும் வரலட்சுமிக்கு சிந்துஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருடன் வரலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது.. இந்த தொடர்பு தகாத உறவில் கொண்டு போய் நிறுத்தியது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சிந்துஸ்ரீ திடீரென இறந்துவிட்டார், போலீசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் சிந்துஸ்ரீ-யை புதைத்து விட்டனர்.

மேலும் ரமேஷை தொடர்பு கொண்ட வரலட்சுமி, குழந்தை இறந்துவிட்டதாகவும், தானே புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

மகளை இழந்த துக்கம் தாங்காமல் கதறி அழுதுள்ளார் ரமேஷ், இதற்கிடையே வரலட்சுமியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் வரலட்சுமியின் விசாரணை நடத்தியதில், உண்மையை ஒப்புக் கொண்டார், காதலனுடன் பழக சிந்துஸ்ரீ இடைஞ்சலாக இருந்ததால் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வரலட்சுமி, ஜெகதீஷை கைது செய்து அழைத்து சென்றனர்.