வீதி விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி.

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலீஸ்
உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

கரடிபோக்கு சந்தியிலிருந்து பெரியபரந்தன் ஊடாக பூநகரி வீதிக்குச் செல்லும் வழியில் ஐந்தாம் வாய்க்கால் பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வேககட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாய்க்காலுக்குள் வீழந்ததன்
காரணமாக பொலீஸ் உத்தியோகத்தர் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்திசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad