சாரதி அனுமதி பத்திரத்திற்கான மெடிக்கல் நாளை முதல் பெற முடியும்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவை நாளை (28) முதல் வழங்கப்படவுள்ளது.

ஈ-சனலிங் ஊடாக முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே இவ்வாறு சேவை வழங்கப்படும்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வெரஹெர, பொலன்னருவ, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள கிளைகள் பொதுமக்களுக்கு திறக்கப்படாது.

ஏற்கனவே மூடப்பட்டிருக்கும் கிளைகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு எதிர்காலத்தில் மாற்று திகதி மற்றும் நேரம் குறித்து அறிவிக்கப்படும்.