யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடமில்லை!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கொரோனா விடுதிகள் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்த ராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது 10 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சைக்கான அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரு விடுதிகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டிருந்தன.

தற்போது அந்த விடுதிகள் இரண்டும் நோயாளர்களால் நிரம்பியுள்ள நிலையில், பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனைப் பதில் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad