ரிஷாட் வீட்டில் துன்புறுத்தப்பட்ட 11 பணிப்பெண்கள்!

 


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிக்காக  அழைத்து வரப்ப்ட்ட மலையக பெண்கள் 11 பேர் கடுமையான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே முறையில் முன்னாள் அமைச்சரின் வீட்டு பணிக்காக அழைத்துவரப்பட்ட பெண் ஒருவர் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் மர்மமான முறையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரிஷாட் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் உத்தியோகபூர்வ இல்லத்தில் இளம் பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்து்ளளது. அந்த பெண்ணை ரிஷாட்டின் மைத்தினரே துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் தனியாக ஒரு விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய பெண், தன்னை துஷ்பிரயோகம் செய்த அறையை பொலிஸாரருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

டயகம சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் ரிஷாட்டின் குடும்பத்தினர் மற்றும் தரகர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, ரிஷாட் வீட்டில் பணிப்பெண்கள் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பிரதான பொலிஸ் பரிசோதகரான வருணி போகவத்த என்பவரை நியமிக்க மேல் மாகாணத்திற்கு பொறுப்பானா சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதற்கமைய மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்காக வருணி போகவத்த தலைமையிலான விசேட குழுவொன்று மலையகத்தை சென்றடைந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள தரகர் ஊடாகவே இந்த பெண்கள் அனைவரும் ரிஷாட்டின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதற்காக லட்ச கணக்கில் தரகருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் தீவிர விசாரணையின் போது தரகர் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad