14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 26 வயது இளைஞன் கைது!

 


முல்லைத்தீவு , ஐயன்கன்குளம் பகுதியில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த போது, சிறுமியுடன் நட்பான இளைஞன், வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கு தகவல் தெரிய வந்ததையடுத்து, கிராம அமைப்பு ஒன்று பொலிசாருக்கு தகவல் லழங்கியது.

இதையடுத்து நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.