மட்டக்களப்பில் 6 வயது சிறுவன் பலி!

 


மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலியாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முன்றாவது பிள்ளையான, தரம் இரண்டில் கல்வி கற்கும் ஆறு வயது நிரம்பிய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

அவர்களின் வீட்டினை உடைத்து புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சிறுவனின் தாய் மற்றும் சகோதரிகள் இருவருமாக இவர்களது வீட்டிற்கு அருகாமையிலுள்ள உறவினரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.

புதிதாக நிர்மானிக்கப்பட்டுவரும் வீட்டில் மின் இணைப்பு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்குள் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடந்ததை கண்ட உறவினர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து நிலையில் இருந்ததாக வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சடலத்தை பார்வையிட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad