யாழில் இளம் பெண்ணை கட்டியணைத்த இளைஞன்!


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இளைஞன் ஒருவர் அத்துமீறி தனது வீட்டிற்குள் நுழைத்து தொந்தரவு செய்ததாக இளம் பெண்ணொருவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
திருமணமாகாத 35 வயதான பெண்ணொருவர் முறைப்பாடளித்த நிலையில்,  சம்பவம் தொடர்பில் 30 வயதான இளைஞன் கைது  செய்யப்பட்டதுடன்  பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். 

குறித்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். அயலிலுள்ள இன்னொரு வீட்டில் ஆடு வளர்ப்பதாகவும், அப் பெண் இரவு ஆடுகளிற்கு தீவனமிட்ட பின்னர் பெற்றோரின் வீட்டுக்கு செல்வது வழக்கமெனவும் கூறியுள்ளார்.

சம்பவ தினத்திலன்று மகள் வீடு திரும்பாததால், இரவு 10 மணியளவில் தாயார் மகளை தேடி அந்த வீட்டிற்கு சென்றுபோதே, இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

இதேவேளை கைதான இளைஞன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த 10 நாட்கள் ஆகிய நிலையில் பெண்ணுடன் தனக்கு பரிச்சயம் உள்ளதாகவும், அவரது அழைப்பிலேயே அந்த வீட்டிற்கு வந்ததாகவும் அவர் வாக்குமூலமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 மேலும் சம்பந்தப்பட்ட இளைஞனும், பெண்ணும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக முற்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad