மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!

 


கம்பஹா பிரதேசத்தில் 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை தற்கொலை செய்துள்ளார்.

பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது பாட்டியிடம் வாழ்ந்து வந்த 14 வயது சிறுமியை தந்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். எனினும் நீதிமன்றத்தின் ஆஜராகும் அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

3 முதல் 4 வருட காலமாக தனது தந்தை தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் தாய் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் 46 வயதுடைய தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்த நிலையில் பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற அச்சத்தில் இருந்த தந்தை வீட்டிற்கு வந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

Tags

Top Post Ad

Below Post Ad