கத்தியால் குத்தப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பலி!

 


இங்கிலாந்தில் அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருந்த பிரித்தானியர் ஒருவர், தன் குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் அறிந்து வட அயர்லாந்திலுள்ள தன் வீட்டுக்கு விரைந்துள்ளார்.

வட அயர்லாந்தில் தலைநகரமான Belfastஇல் அமைந்துள்ள அந்த வீட்டிலிருந்து அலறல் கேட்டதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தவர்கள் பொலிசாரை அழைத்துள்ளார்கள். பொலிசார் வந்தபோது, பிறந்து ஏழு வாரங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும், இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றும் கத்தியால் குத்தப்பட்டுக் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

அந்த ஆண் குழந்தையை காப்பாற்ற மருத்துவ உதவிக்குழுவினர் எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை. குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அதன் சகோதரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அந்த வீட்டிலிருந்த 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், தன் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு குழந்தை பிழைத்துவிடாதா என மருத்துவமனையில் தவமிருக்கிறார் அந்த தந்தை.