யாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.

யாழ் மாவட்டத்தின், நெல்லியடி பொலிஸ் பிரிவில் வீதியில் செல்லும் யுவதிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொருவர் தலைமறைவாகி விட்டார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நெல்லியடி- கொடிகாமம் வீதியில், துன்னாலையை அண்டிய பகுதிகளில் வீதியில் செல்லும் யுவதிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபடுபவர்கள் குறித்து பொலிசாருக்கு பல முறைப்பாடுகள் வந்தன.

இந்த சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலை, துன்னாலையை சேர்ந்த யுவதியொருவர் வீதியில் செல்லும் போது,

இரண்டு இளைஞர்கள் பின்னால் வந்து யுவதியின் பின் பகுதியில் நுள்ளி, தட்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

யுவதியும் துன்னாலை பகுதியை சேர்ந்தவர் என்பதால் சமூக விரோத செயலில் ஈடுபட்ட இருவரையும் அவர் அடையாளம் கண்டார். காமுகர்கள் இருவரும் துன்னாலையை சேர்ந்தவர்கள்.

அவர் நேற்று முன்தினம் மாலையே நெல்லியடி பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். துரிதமாக செயற்பட்ட பொலிசார் நேற்று முன்தினமே, இரண்டு சந்தேகநபர்களின் வீடுகளையும் சுற்றிவளைத்தனர். ஒருவர் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். 22 வயதான ஒருவர் சிக்கினார்.

இரண்டு இளைஞர்களும் போதைக்கு அடிமையானவர்கள். கைதானவர் திருமணம் செய்து, தற்போது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டார்.

பெண்களை பார்க்கும் போது தனக்கு ஆசையாக இருப்பதாகவும், அதனால் அங்க சேட்டையில் ஈடுபட்ட வந்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad