ஆடி மாசம் முடிந்தும் மனைவியை அனுப்பாத பெற்றோர்-கணவன் எடுத்த முடிவு!

 


திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்துள்ள தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவர், மகன் திலீபன் (33). இவர், திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலும், திலீபனும், அதே பகுதியை சேர்ந்த மருத்துவரான 27 வயது பெண் திவ்யா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திவ்யா, ஜோலார்பேட்டை அருகே அம்மா மினி கிளினிக் சென்டரில் தற்காலிகமாக பணியாற்றுகிறார். மேலும், ஆடி மாதம் என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை திவ்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இதனையடுத்து கடந்த நாட்களுக்கு, திலீபனின் குடும்பத்தினர் மருமகளை அழைத்து வருவதற்காக திவ்யாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர். ஆனால் புதுப்பெண்ணை அவர்கள் அனுப்பாத நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாப்பிள்ளை வீட்டார் அவரகளது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த திலீபன் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் திலீபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad