சுவாதீனமற்ற மகள்களுடன் தனியாக வசித்த தாயாருக்கு நேர்ந்த பயங்கரம்!

 


தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மகளால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கோயில்பிச்சை மனைவி உஷா (43). தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராக பணியாற்றிய இவர், தற்போது அந்தப் பணியிலிருந்து விலகி பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வந்தார்.

இவரது மகள்கள் நீனா (21), ரீனா (19). இவர்களில் நீனா பி.இ. முடித்துள்ளார். ரீனா பி.இ. படித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது.

இதனால் அடிக்கடி தாய்க்கும், மகள்களுக்கு தகராறு நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை உஷா வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் கத்திக்குத்து மற்றும் கம்பியால் அடித்த காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட மகள்கள் நீனா, ரீனா ஆகியோரின் கைகள் மற்றும் ஆடைகளில் ரத்தக்கறை இருந்ததை பார்த்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் விசாரித்தனர். விசாரணையில் மூத்தமகள் நீனா, தாய் உஷாவை கத்தியால் குத்தியதை ஒப்புக் கொண்டார். இருவரும் புத்தி சுவாதீனமற்ற  அவர்களை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொலிசார் சேர்த்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் நீனாவும், ரீனாவும் கோர்ட் அனுமதி பெற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுவர் என போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் கதவு உட்புறமாக பூட்டியிருந்ததாலும், மகள்கள் நீனா, ரீனா ஆகியோரது ஆடை மற்றும் கைகளில் ரத்தக்கறைகள் இருந்ததாலும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் அவர்கள் 2 பேர் மீது பாளை பொலிசார் சந்தேக ரீதியில் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

உஷாவுக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மற்றொருவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்.

உஷாவின் கணவர் கோயில்பிச்சையும் மனநிலை பாதிக்கப்பட்டு பாளை அருகே ஆரைக்குளத்தில் வசித்து வருவதால், அவரது உடல் பெங்களூரில் இருந்து நெல்லை வந்த சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சகோதரர்களை நம்பியிருந்த உஷா கணவர் கோயில்பிச்சை மும்பை ரயில்வேயில் வேலை பார்த்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டு சொந்த ஊரான பாளை அருகே ஆரைக்குளத்திற்கு வந்து நிரந்தரமாக எங்கும் தங்காமல் ஊர் சுற்றி வருகிறார்.

இதனால் வாழ்வாதாரத்துக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் சகோதரரையும், பெங்களூரில் வேலை பார்க்கும் சகோதரரையும் உஷா நம்பியிருந்தார்.

அவர்கள் மாதாமாதம் உஷாவின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி வந்தனர். இதனிடையில் உஷா வீட்டில் சமைப்பதில்லை. 3 வேளையும் மெஸ்சில் உணவை வாங்கித் தான் சமாளித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad