யாழில் பெற்ற மகனுக்கு போதையும் வழங்கி பெண்களை கூட்டியும் கொடுத்த தாய்.

யாழில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் 22 வயது ஒரே ஒரு மகன் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளான். அவனை பல வழிகளிலும் போதைப் பொருள் பாவனையிலிருந்து மறக்கச் செய்வதற்கு முயன்றார் கோடீஸ்வ வர்த்தகர். ஆனால் போதைப் பொருள் இல்லாத காரணத்தால் மகன் இரு தடவைகள் தற்கொலைக்கு முயன்றதால் அந்த முயற்சியைக் கைவிட்டு தற்போது அவனுக்கு வீட்டில் வைத்தே போதைப் பொருளை வழங்கி வருவதுடன் போதைப் பொருள் பாவனையால் அவனுக்கு ஏற்படும் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ளவும் வீட்டு வேலைக்காரி என்ற போர்வையில் தென்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க வேற்று இனப் பெண்ணையும் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளாராம்.

யாழில் பிரபல தனியார் பாடசாலையில் படித்து வந்த மகன் 17 வயதிலேயே போதைப் பொருள் பாவிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்த போது அதனை கோடீஸ்வர வர்த்தகர் கண்டித்த போது மகன் தற்கொலைக்கு முயன்றுள்ளான். இதனால் வர்த்தகரின் மனைவி அதிர்ச்சியடைந்து மகனுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்யத் தொடங்கியுள்ளார். தினந்தோறும் போதைப் பொருள் பாவனைக்கு தேவைப்படும் ஆயிரக்கணக்கான ரூபா பணம் மற்றும் பல லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் என்பவற்றை தாயாரே வாங்கிக் கொடுத்துள்ளார். போதைப் பொருள் பாவிப்பவர்கள் சாப்பாடு, மற்றும் குளிப்பதை விரும்பமாட்டார்கள் என்றும் மகன் சாப்பிடாது, குளிக்காது திரியும் போது அவனை காலையில் எழுப்பி குளிக்க வைத்து சாப்பாடு கொடுத்து போதைப் பொருளுக்கான பணத்தையும் வர்த்தகரின் மனைவி கொடுத்து அனுப்புவாராம்.

இந் நிலையில் கடந்த வருட இறுதியில் போதைப் பொருள் வைத்திருந்த சந்தேகத்தில் மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் அவனை பெருமளவு பணம் செலவு செய்து மீட்டு வந்து தற்போது வீட்டில் வைத்து மகனுக்கான போதைப் பொருள் மற்றும் பாலியல் தேவைகளை தாயாரே கவனித்து கொடுத்து வருகின்றாராம். கோடீஸ்வர வர்த்தகரி்ன் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அவனை புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்புமாறு கூறியும் அதற்கு வர்த்தகரின் மனைவி மறுப்புத் தெரிவித்து தன்னுடனேயே வைத்திருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஓரிரு நாட்களுக்கு முன் தமது இரு மகன்களையும் போதைப் பொருள் பாவனையிலிருந்து மறக்கச் செய்ய நீதிமன்றில் ஒப்படைத்த பெற்றோரும் இருக்கும் நிலையில் கோடீஸ்வர வர்த்தகரின் இவ்வாறான போக்கு மகனின் வாழ்க்கையை நாசமாக்கும் என வர்த்தகருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad