க.பொ.த சாதாரணதர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 


இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. 

அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, பரீட்சையை பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் மார்ச் 03ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.