யாழில் வாள்வெட்டு குழு அட்டூழியம்! யாழ்.பருத்தித்துறை - அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை 4:00 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கம் - அல்வாயில் இடம்பெற்றுள்ளது.

வரோதயம் மேரி ஜோசப்பின் ( சந்திரா ) என்ற பெண் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.