இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை!

 


இலங்கையில் செயற்படும் அனைத்து பாலியல் ரீதியான இணையத்தளங்களையும் தடை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோகன அபேவிக்ரம இன்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

அத்துடன் பாலியல் இணையத்தளங்கள், அத்தகைய இணையத்தளங்களில் பெயர்களை பதிவு செய்தல், பணம் செலுத்துதல் மற்றும் சேவைகளை வழங்குவது தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இணையம் மூலம் சிறுமி ஒருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பாலியல் இணையத்தளங்கள் காரணமாக தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த நீதித்துறை தலையிட வேண்டும் என்பதால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 124 இன் அதிகார வரம்பைப் பயன்படுத்தி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி மேலும் கூறினார்.

கல்கிசை பகுதியில் 15 வயது சிறுமி இணையம் மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது இந்த இணையதளங்கள் தொடர்பான உண்மைகள் முன்வைக்கப்பட்டன.

விசாரணையின் கடைசி நாளில் நீதிபதி பிறப்பித்த உத்தரவின் படி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் சட்ட அதிகாரி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இந்த வழக்கில் 31 வது சந்தேக நபராக பெயரிடப்பட்டார்.  

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad