சற்றுமுன் யாழில் டிப்பர் மோதி இளம்பெண் பரிதாப மரணம்.

கோப்பாய் சந்திக்கு அண்மையாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில், இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சற்று முன் இந்த கோர சம்பவம் நடந்தது.

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவர்களை மோதித்தள்ளியது. இதில் 34 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுழிபுரத்தை சேர்ந்த பெண்ணே உயிரிழந்தார்.

கொடிகாமத்தில் உள்ள கணவனின் தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றது.