யாழ் போதனா வைத்தியசாலையில் கர்ப்பிணி பெண் மரணம்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட கர்ப்பவதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.நாவாந்துறை பகுதியை சேர்ந்த ராஜன் மரியதெஸ்ரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,

அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பவதிகளுக்கான விசேட சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

Top Post Ad

Below Post Ad