ஜனாதிபதிக்கு சந்திரிக்கா அனுப்பிய அவசர கடிதம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறைவாசம் அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யும்படி அக்கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் சிரேஷ்ட பிரஜையாக இக்கோரிக்கையை முன்வைப்பதாக அவர் கூறியுள்ளார்.