ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே.! ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஜப்பான் இளைஞர்!


இப்போது வரும் புதிய புதிய ஆப் வசதிகளையும், சமூக வலைத்தளங்களையும் மக்கள் அதிகம் பயன்படுத்து துவங்கி விட்டனர். மேலும் சிலர் உணவு, தூக்கம் போன்றவற்றை மறந்து ஸ்மார்ட்போன்களில் கேம் விளையாட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

அதாவது இந்த காலத்தில் 2D, 3D கேம்கள் என பல வந்தவண்ணம் உள்ளன, மனிதனின் ஓய்வு நேரத்தில் வீடியோ கேம் விளையாடியது போய் தற்போது இளைய தலைமுறையினர் பலர் எந்நேரமும் அதிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர் எனலாம். 

இதுபோன்று சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவிடுதல் மற்றும் இரவு நேரங்களில் கேம் விளையாடுதல்,திரைப்படங்கள் பார்ப்பது போன்றவற்றால் சிலர் தூங்க சென்றாலும் தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர். 

இப்போது இந்த பிரச்சனைக்காக அதிக மக்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெருகின்றனர். இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த இளைஞர் பற்றிய ஒரு தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும். 

அதாவது ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி. இவரின் வயது 36 ஆகும். தைசுகே ஹோர்ட் ஸ்லீப்பர் அஸோசியேஷன் தலைவராக இருப்பதாக தகவல். 

தைசுகே ஹோரி கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறாராம். ஆனாலும் இவர் மிகவும் அரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் தூங்கும் நேரத்தை எப்படி குறைப்பது என்பது குறித்து நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருவதாக கூறியுள்ளார் தைசுகே ஹோரி. 

மேலும் தைசுகே ஹோரி கூறியது என்னவென்றால், அனைவரையும் போன்று நானும் 8 மணி நேரம் தூங்கிக்கொண்டு இருந்தேன். ஆனாலும் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தை நான் குறைக்கத் தொடங்கினேன். 

பின்பு படிப்படியாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன் என்று தெரிவித்தார் தைசுகே ஹோரி. அதேபோல் சில தினங்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட தூங்குகிறேன் என்று கூறியுள்ளார் தைசுகே ஹோரி. ஆனாலும் இதனால் உடல் ரீதியாக எனக்கு எந்த தொந்தரவும் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சில வருடங்களுக்கு முன்பு 9 மணிக்கு முன்பே வீடுகளில் இரவு உணவு முடித்து தூங்க சென்று விடுவர். இப்போது படிப்படியாக தூங்க செல்லும் நேரம் அதிகரித்து நள்ளிரவைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். 

அதாவது டிவி, ஸ்மார்ட்போன் போன்றவற்றை நாம் அதிகமாக பயன்படுத்த துவங்கிவிட்டோம். குறிப்பாக இதுபோன்ற சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் தூக்கம் வராமல் சிலர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஆனாலும் தினசரி வேலைகள், தசை மீட்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு தூக்கம் மிகவும் அவசியம். குறிப்பாக உடலுக்கு தேவையான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் சிலருக்கு மோசமான அறிகுறிகளை உண்டாக்கும் என்றே கூறலாம். அதேபோல் தூக்கம் நிறைவாக இருந்தால் அது அதிக நன்மைகளை தரக்கூடும்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad