இளம் குடும்பப் பெண்ணை நள்ளிரவு வீடு புகுந்த 3 கொள்ளையர்கள் கட்டி வைத்துச் செய்த கொடூரம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரதேசத்திற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு வீட்டில் இருந்த பணம்,நகை,தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 19.11.21 அன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இளம் குடும்ப பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் தங்களை அடையாளம் காணாதவாறு முகத்தினை மூடிய நிலையில் வேலியினை வெட்டி காணிக்குள் சென்று வீட்டு யன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த பெண்ணின் கை,கால்களை கட்டி வைத்து விட்டு பெண் சத்தமிட முடியாதவாறு வாய்க்குள் துணிகளை அடைந்து சித்திரவதை செய்து வீட்டில் இருந்து சுமார் 25 இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கணவனை பிரிந்த நிலையில் தனது பிள்ளைகளை சிறுவர் இல்லத்தில் சேர்த்திருந்த நிலையில் தனிமையில் வீட்டில் இருந்த பெண்ணிடமே கொள்ளையர்கள் தமது கைவரிசையை காட்டி செனறுள்ளனர். இதன்போது 15 பவுண் நகை, 5 இலட்சம் ரூபா பணம்,மற்றும் பெறுமதியான தொலைபேசி என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனக்கு ஏற்பட்ட இந்த மிரட்டலுடனான கொள்ளை சம்பவம் பாரிய அச்ச சூழலை தோற்றுவித்துள்ளதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார்.

மூன்று பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் இந்த கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக முள்ளியவளை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

20.11.21 அன்று தடையவியல் காவல்துறையினர், மோப்பநாய்கள் சகிதம் வந்து ஆய்வு செய்த நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad