யாழ் வலிகாமம் பகுதியில் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் கடும் காயங்களுடன் ஆசிரியர் ஒருவர் வீடொன்றிலிருந்து அயலவர்களால் மீட்கப்பட்டு அவரின் உறவுகள் மூலம் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தீவுப் பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 34 வயயதான இரு பிள்ளைகளின் தாயாரான ஆசிரியை ஒருவரின் வீட்டிலேயே குறித்த ஆசிரியர் கடும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் காயங்களுடன் மீட்கப்பட்ட போது பெண்கள் சாறியுடன் அணியும் பாவாடை ஒன்றையே அவர் அணிந்திருந்தார் என அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது. தனியார் பாதுகாப்புச் சேவையில் பணிபுரியும் ஆசிரியையின் கணவராலேயே குறித்த ஆசிரியர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அயலவர்கள் கூறுகின்றார்கள். தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் அடிக்கடி ஆசிரியையின் வீட்டுக்கு வருபவர் எனவும் கணவருடனும் நல்ல நட்புடன் பழகியவர் எனவும் அயலவர்கள் கூறுகின்றாா்கள்.
இந் நிலையில் தாக்குதல் ஏன் நடந்தது என தமக்கு தெரியாது எனவும் ஆனால் ஆசிரியையின் கணவருக்கு பெருமளவு கடன் உதவி குறித்த ஆசிரியர் வழங்கிய விடயம் தமக்கு தெரியும் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆசிரியர் தாக்குதலுக்கு உள்ளான போது பெரும் சத்தமெடுத்து கத்திய போதே அயலவர்கள் அவரை மீட்டுள்ளார்கள்.
ஆசிரியையின் 6 வயது மகனினிடம் அயலவர்கள் இது தொடர்பாக விசாரித்த போது ‘மாமா‘ (ஆசிரியர்) தனக்கும் தனது தம்பிக்கும் சொக்லேட் வாங்கிக் கொண்டு வந்து தந்துவிட்டு சமையலறைக்குள் புகுந்து கதவை பூட்டிவிட்டு அம்மாவுடன் சமைத்துக் கொண்டிருந்ததாகவும் அந் நேரம் அலுவலகம் சென்ற அப்பா திடீரென வந்து இடையே வந்து புகுந்து கதவை திறக்க செய்து அம்மாவையும் மாமாவையும் தாக்கியதாக கூறியுள்ளான். இதே வேளை ஆசிரியையும் கடும் காயங்களுக்கு உள்ளான போதும் சிகிச்சைக்காக வைத்தியசாலை செல்லாது வீட்டிலேயே தங்கியுள்ளதாக அயலவர்கள் கூறுகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை என அறியவருகின்றது.