யாழில் கிணற்றில் நீந்தச் சென்ற ரஜீபன் நீரில் மூழ்கிப் பலி!வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவர் தனது நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு சென்று சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலே நீந்துவதற்காக சென்றிருந்தார்.

இந்தநிலையில் அவர் நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

மூளாய் வைத்தியசாலையில் இருந்து குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவரது உயிர் பிரிந்தது.

குறித்த மாணவனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

எமது இணையத்தளம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.