திருமணம் முடித்து இரு குழந்தைகளுக்கும் தாயாரான 37 வயது யாழ் மீசாலையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் பிரான்சில் கணவரின் கொடூரமான தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலில் ஈடுபட்ட கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் பொன்டி என்ற இடத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக வர்த்தகத்துறையில் கல்வி கற்ற குறித்த பெண் பல்கலைக்கழக கல்வியை இடை நடுவில் கைவிட்டுவிட்டு 2006ம் ஆண்டளவில் கொடிகாமத்தை சொந்த இடமாகக் கொண்ட பிரான்ஸ்சில் வசித்து வந்தவரை இந்தியா சென்று திருமணம் முடித்து பின் கொழும்பில் வந்து தங்கி நின்று 2008ம் ஆண்டளவில் பிரான்ஸ் சென்று கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது காதலன் இருந்தது அங்கு கல்வி கற்று வந்த அவரது நண்பர்களுக்கு தெரிந்த விடயமாகும். காதலனுக்கே சொல்லாது இந்தியா சென்று திருமணம் முடித்திருந்தார் குறித்த பெண். காதலனும் 2010ம் ஆண்டளவில் பிரான்ஸ் சென்றதாகத் தெரியவருகின்றது. காதலனும் இன்னொரு பெண்னை திருமணம் முடித்துவிட்டார்.
இந் நிலையிலேயே குறித்த பெண்ணின் கணவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு வேறு யாரோ ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து துப்புத்துலக்கிய போது மனைவியின் முன்னைய காதல் விடயமும் அது தனது வீடுவரை தற்போது தொடர்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.
தனது வீட்டில் இரகசிய கமரா வைத்து கண்காணித்து இருவரையும் ஆதாரபூர்வமாக பிடித்துள்ளார் கணவன். இதன் பின்னரே மனைவி மீது கணவர் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார் கணவர். கடந்த ஞாயிறு நடந்த இச் சம்பவத்தில் கண்கள் மற்றும் வாயில் கடும் காயங்களுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.