மாங்காட்டில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம்- கல்லூரி மாணவரிடம் விசாரணை

பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவி மாங்காட்டில் உள்ள தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். மேலும் உருக்கமான 3 கடிதங்களையும் அவர் எழுதி வைத்திருந்த நிலையில் மாங்காடு போலீசார் அந்த கடிதத்தின் அடிப்படையில் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இன்றைய தினம் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று மாலை இறுதி சடங்கு நடந்தது.

இந்த நிலையில் மாணவி 9 ஆம் வகுப்பு வரை பயின்ற தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவியின் செல்போனில் பதிவாகியிருந்த செல்போன் நம்பர்களை குறிப்பிட்ட எண்களில் உள்ள பள்ளி மாணவன் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மாங்காட்டைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவர் அதிக அளவில் அந்த மானவிக்கு பேசி இருப்பதால் அந்த மாணவன் மீது சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை செய்துள்ள நிலையில், அந்தக் கல்லூரி மாணவனிடம் மட்டும் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.