டிசம்பர் 13க்கு முன் இந்த நாட்டிலிருந்து கனடா திரும்புவோருக்கான பயணக் கட்டுப்பாடுகளில் ஒரு புதிய மாற்றம்

தென்னாப்பிரிக்காவிலிருந்து கனடா திரும்புவோருக்கான பயணக் கட்டுப்பாடுகளில் ஒரு புதிய மாற்றத்தை இணைத்துள்ளது கனடா. அதன்படி, டிசம்பர் 13க்கு முன் தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானத்தில் கனடா திரும்பும் தகுதியுடைய கனேடியர்கள், தென்னாப்பிரிக்காவில் ஒரு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து கனடா திரும்பும் கனேடியர்கள், மூன்றாவது நாடு ஒன்றிற்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் கஷ்டத்தைத் தவிர்க்கும் வகையில், கனடா தனது பயண விதிகளில் தற்காலிகமாக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.

கனேடிய குடிமக்களும், நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்களும் கனடா புறப்படுவதற்கு முன், தென்னாப்பிரிக்காவில் ஒரு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கனடா அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, கீழ்க்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1.  அவர்கள், கனடாவுக்கு பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், தென்னாப்பிரிக்காவில் உள்ள, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் ஒன்றில், ஒரு கொரோனா மூலக்கூறு வகை பரிசோதனை செய்து, தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். அல்லது, பயணம் புறப்படுவதற்கு 14 முதல் 180 நாட்களுக்குள் தங்களுக்கு கொரோனா தொற்று தாக்கியிருந்தது என்பதற்கான ஆதாரத்தை தங்களுடன் வைத்திருக்கவேண்டும்.
  2.  அவர்கள், ஜோஹன்னஸ்பர்க் அல்லது கேப் டவுனிலிருந்து, ஜேர்மனியிலுள்ள ஃப்ராங்பர்ட்டுக்கு Lufthansa விமானம் ஒன்றில் சென்று, டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் கனடா புறப்படும் விமானத்தில் அங்கிருந்து புறப்படவேண்டும்.
  3.  அல்லது ஃப்ராங்பர்ட் வழியாக கனடாவுக்கு வரும் நேரடி Lufthansa விமானம் அல்லது ஏர் கனடா விமானம் ஒன்றில் கனடா வரலாம்.

புதிய பயணக் கட்டுப்பாடுகளிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கனேடியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, கனடா அரசு, கட்டுப்பாடுகளில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும், மூன்றாவது நாடு ஒன்றிற்கு சென்று, அங்கு கொரோனா பரிசோதனை செய்வது, நாடு திரும்புதற்கு தடையாக இருந்ததாக புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad