திருகோணமலை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு: சாரதிக்கு கொரோனா தொற்று!

திருகோணமலை-கண்டி பிரதான வீதி கப்பல்துறை மங்குபிரிஞ் பகுதியில் ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் இதுவரை 26 பேர் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்

குறித்த விபத்து இன்று (07) 6. 45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குச்சவெளி பிரதேசத்தில் இருந்து கப்பல் துறை தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் போது இரண்டு பஸ்களை முந்திச்செல்ல முற்பட்டபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியத்தினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்

விபத்துக்கானவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் பஸ் சாரதியான ஜெயபுர தம்பலகாமத்தை சேர்ந்தவருக்கு மேற்க்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இவ் விபத்து பஸ் சாரதியின் கவனயீனத்தினால் ஏட்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post திருகோணமலை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு: சாரதிக்கு கொரோனா தொற்று! appeared first on Pagetamil.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad