எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஐ.ம.ச முறைப்பாடு!

வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான அண்மைய சம்பவங்களுக்கு காரணமான அனைத்து நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

எரிவாயு கூறுகளை திருத்தியமைத்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தவர்கள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘சமீப காலங்களில் ஏராளமான எரிவாயு சிலிண்டர் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிவாயு கசிவு வெடிப்புகளுக்கு கலவையில் ஏற்பட்ட மாற்றமே முக்கிய காரணம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிலிண்டர்களின் கலவையில் தெரிந்தே திருத்தம் செய்ததால், எரிவாயு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதை அமைச்சரே ஏற்றுக்கொண்டார்’ என, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

The post எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஐ.ம.ச முறைப்பாடு! appeared first on Pagetamil.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad