கொழும்பில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அதிரடி சோதனை: சிக்கிய 7 சந்தேக நபர்கள்

கொழும்பு – கொம்பனித் தெருவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 7 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும், வலான மோசடி தடுப்பு பிரிவு நீதிமன்ற உத்தரவுடன் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வலன மோசடி தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழு கோட்டை நீதிமன்றில் பெற்றுக்கொண்ட சிறப்பு உத்தரவுக்கு அமைய, கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நட்சத்திர ஹோட்டலில் நடந்த களியாட்டம் ஒன்றிலே‍ இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் கருப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad