காகித பயன்பாடே இல்லாத நிர்வாகம்…. சாதனை படைத்த துபாய்….!!!!

பொதுவாக அலுவலக பணி என்றாலே, காகித பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்தநிலையில், அலுவல் பணிகளுக்கு 100% காகிதத்தை பயன்படுத்தாத முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாறியுள்ளது. துபாய் அரசின் அனைத்து உள் மற்றும் வெளி தொடர்புகள் பரிவர்த்தனைகள், சேவைகள் இவை அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறியுள்ளதாக பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி துபாய் உலகின் முன்னணி டிஜிட்டல் தலைநகராக விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காகித பயன்பாடு பயன்படுத்தாமல் உள்ளதால் அரசுக்கு 350 மில்லியன் டாலர் அளவுக்கு பணம் மிச்சமாகியுள்ளது. மேலும் அவர் கூறுகையில், 14 மில்லியன் மனித வேலை மணிநேரங்களும் இதனால் லாபம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, துபாய் அரசு இனிமேல் 1,800 வகையான டிஜிட்டல் சேவைகள் மூலம் நிர்வகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

Below Post Ad