“வடகொரிய அதிபரின் தாத்தா மரணம்!”…. அவர் யார் தெரியுமா….?

வட கொரிய நாட்டை நிறுவிய கிம் இல் சுங் என்ற தலைவரின் இளைய சகோதரர் தான் கிம் யோங் ஜூ. தற்போது அதிபர், தன் தாத்தா மரணத்திற்கு இரங்கல் செய்தி வெளியிட்டதாக அரசாங்கத்தின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், கிம் யோங் ஜூ கட்சிக்கான கொள்கைகளை செயல்படுத்துவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார்.

நாட்டின், ஆளும் கட்சியிலும், அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளிலும் பல வருடங்களாக பதவி வகித்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது, அவருக்கு 100 வயது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கிம் இல் சுங், கடந்த 1948 ஆம் வருடத்தில் வடகொரிய நாட்டை தோற்றுவித்தார்.

அப்போது முதல், தற்போது வரை அவரின் குடும்பத்தினர் தான் நாட்டை நிர்வகித்து வருகிறார்கள். கிம் இல் சுங், கடந்த 1904 ஆம் வருடத்தில் மரணமடைந்தார். அதன்பின்பு அவரின் மூத்த மகனான கிம் ஜோங் இல் அதிபராக பொறுப்பேற்றார். இவர் கடந்த 2011-ம் வருடத்தில் மரணமடைந்த பின், அவரின் கடைசி மகன் கிம் ஜாங் உன் பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad