தாவணியில் பவானி.. சைடு போஸில் இளசுகளின் தூக்கத்தை தொலைத்த புகைப்படங்கள்

ரெட்டைவால் குருவி எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி. அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான பாசமலர், தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி மற்றும் விஜய் டிவியில் சின்னத்தம்பி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

பல சீரியல் நடிகைகள் குடும்ப பெண்களை மட்டும்தான் தன்பக்கம் ஈர்த்து வைப்பார்கள். ஆனால் பவானி ரெட்டி குடும்ப பெண்களை தவிர பல ஆண்களையும் தன்னுடைய ரசிகர்களாக ஈர்த்து வைத்துள்ளார்.

சின்னத்தம்பி மற்றும் ராசாத்தி சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்தார் என்று கூறுவதைவிட வாழ்ந்தார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கச்சிதமாக கிராமத்து பெண்ணாகவே நடித்து அந்த சீரியல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தார்.

தற்போது இவருக்கு தமிழில் எந்த ஒரு சீரியலிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் பவானி ரெட்டி. சமூக வலைத்தளத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுவும் ஏதோ ஒரு சோகத்தில் இருப்பது போல் சுவற்றில் சாய்ந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்து பல ரசிகர்களும் என்ன சோகமாக இருக்கும் என கேள்வி கேட்டு வருகின்றனர்.மேலும் புகைப்படத்தை உற்றுப்பார்த்து ஒரு சில கமெண்ட்களையும் கூறி வருகின்றனர்.