யுவதியைக் கடத்திக் கொண்டு ஓடிய டிப்பர் கிளிநொச்சியில் விபத்து!! ஒருவர் பலி!!

கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வட்டக்கச்சி – புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்டதில் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துடன் இளம்பெண் ஒருவர் உட்பட்ட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதேவேளை குறித்த டிப்பர் வாகனத்தினை சிலர் மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்றதாகவும் அதன்போதே டிப்பர் வாகனச் சாரதி அதி வேகமாக வாகனத்தைச் செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளதாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் டிலக்சன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வாகனத்தில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 வயதுடைய இளம் பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து கரவெட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் குடும்பத்தார் எனத் தெரிவிக்கும் நபர்கள் தெரிவிக்கையில்,

தம்முடைய பெண்ணை சில நபர்கள் டிப்பர் வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும் அவர்களை தாங்கள் விரட்டிச் சென்றதாகவும் தப்பிக்க முற்பட்ட டிப்பர் வாகனமே விபத்துக்குள்ளதானதாகவும் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும் டிப்பரில் பயணித்த பெண்ணின் குடும்பத்தார் தரப்பின் குற்றச்சாட்டுத் தொடர்பிலான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதே வேளை குறித்த பெண்ணை டிப்பர் சாரதி உட்பட்டவர்கள் உடலுறவுக்காக அழைத்துச் சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.