பிக்பாஸில் இருக்கும் தனது நண்பன்…. விஜய் செய்த செயல்…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் விஜய். இவர் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய ஒரு நடிகர். நடிகர் விஜயை படப்பிடிப்பு தளங்களில் பார்ப்பதை விட, அவருடைய நண்பர்களுடன் அதிகமாக பார்க்கலாம். விஜயின் நண்பர்களில் நடிகர் சஞ்சீவ் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் நிறைய முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 5-வது சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைந்துள்ளார்.

இந்த நிலையில், சஞ்சீவின் மனைவி பிரீத்தா ஒரு பேட்டியில் எனது கணவர் பிக் பாஸ் சென்றதில் இருந்து அவரது நண்பர்கள் 2 நபர்களாவது ஒரு நாளைக்கு போன் செய்து விடுவார்கள். விஜய் கூட போன் செய்து வீட்டில் எல்லோரும் நலமா என்று நலம் விசாரித்தார். சஞ்சீவ் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனதும் விஜய் அவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் ஓட் செய்ய மெசேஜ் அனுப்பினேன். அந்த மெசேஜை பார்த்துவிட்டு விஜய் அவர்களும் கண்டிப்பாக நான் ஓட் செய்வேன் என கூறியதாக அவர் பேட்டியளித்துள்ளார்.