யாழில் கடற்படை கெப் வாகனத்துக்கு கல்லெறிந்தவர் யார்? பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணத்தில் நேற்று முன் தினம்(14) மாலை கடற்படை கெப் ரக வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் தபால் நிலையத்துக்கு அருகில் கல் வீசப்பட்டுள்ளதுடன், கடற்படை கெப் வாகனம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது மறைந்திருந்து நபர் ஒருவர் கல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும் வாகனத்தின் கண்ணாடி மட்டும் சேதமடைந்துள்ளது. கல்லெறிந்த குற்றவாளி யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், அப்பகுதியில் சிசிடிவி கமராக்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். சும்மா சொல்லக் கூடாது, நல்ல ஸ்பாட்டா பார்த்து தான் எறிந்துள்ளார்.