11ஆம் வகுப்பு மாணவியின் வாயில் விஷத்தை ஊற்றிய வாலிபர்

11ஆம் வகுப்பு படித்த சிறுமியின் வாயில் விஷத்தை ஊற்றி விட்டு அந்த வாலிபரும் தனக்குத்தானே விஷத்தை குடித்துக் கொண்டதால் இருவருமே மயங்கி விழுந்த நிலையில் அவ்விருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் குடும்பத்தினர். ஒருதலை காதலால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூர் அடுத்த செவல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அதே பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அவரின் காதலை அச்சிறுமி ஏற்கவில்லை. தொடர்ந்து காதலை சொல்லி துரத்தி சென்ற போதும் காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்த வேல்முருகன் சிறுமியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அங்கே தனிமையில் இருந்த சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். சிறுமி மறுக்கவோ அவரை கண்டபடி திட்டி இருக்கிறார். கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதன் பின்னரும் ஆத்திரம் தீராத அவர் முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்துச் சென்றிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியிருக்கிறார் இதில் சிறுமி மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர் தானும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துக்கொண்டு, பிளேடால் கையை அறுத்துக்கொண்டு மயங்கி விழுந்திருக்கிறார்.

குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்து பதறி அடித்துக் கொண்டு இருவரையும் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். தகவல் அறிந்த போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad