இந்த வாரம் பிக்பாஸில் காணாமல் போகும் போட்டியாளர்.. ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தே விட்டது

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறு விறுப்புடனும், பயங்கர எதிர்பார்ப்புடனும் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ளதால் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறுவார் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கிறது.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஏழு பேரில் அமீர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு செல்கிறார். இதனால் மீதம் இருக்கும் ஆறு பேரில் ஒருவர் குறைந்த ஓட்டுகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருக்கிறார்.

அதில் ராஜுவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. இவரைத் தவிர மற்றொரு விஜய் டிவியின் பிரபலமான பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் அதிக ஓட்டுகள் கிடைக்கும்.

மீதமிருக்கும் 4 போட்டியாளர்களில் யாருக்கு குறைந்த ஓட்டு கிடைக்கும் என்ற கருத்து கணிப்பும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. மேலும் ஒவ்வொரு வாரமும் இணையதளத்தில் ஓட்டுகளின் அடிப்படையில் யார் வெளியேறுவார் என்ற தகவல்கள் உலா வரும்.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி அனைவரும் எதிர்பார்த்த ராஜு, பிரியங்கா, சிபி மூவரும் அதிக ஓட்டுகளை பெற்று முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் தாமரை, பவானி ரெட்டி, நிரூப் ஆகியோர் இருக்கின்றனர்.

இதில் பவானி மற்றும் நிரூப்புக்கு மிகக் குறைவான ஓட்டுகள் கிடைத்துள்ளது. சமீபகாலமாக பிக்பாஸ் ரசிகர்களை அதிகம் எரிச்சலூட்டும் முகங்களாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர். எப்போதும் குழப்ப நிலையில் இருப்பது மற்றும் எலிமினேஷன் பயத்தில் ஏதாவது பேசுவது என்று அவர்கள் பொழுதை கழிக்கின்றனர்.

இதனால் இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருதினர். அதில்நிரூப் இந்த வாரம் மிகவும் குறைவான ஓட்டுகள் பெற்று பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ராஜு பாய்க்கு அதிக ஓட்டுக்கள் இருப்பதாகவும் இணையத்தில் ஓட்டிங் எண்ணிக்கை கசிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad