தமிழ் சினிமாவில் கடின உழைப்பின் மூலம் நிலையான இடம் பிடித்தவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த முதல் படத்திலிருந்த தோற்றத்தைப் போலவே சற்றும் மாறாமல் அதே உடலமைப்பை உடன் இன்றும் இருக்கிறார். அதேபோல் தனுஷ் ஆரம்பத்திலிருந்தே எளிமையான குணம் கொண்டவர்.
தனுஷ் சினிமாவில் நுழைந்து புதிதில் பல விமர்சனங்களை பெற்றாலும் அவற்றைக் கடந்து தற்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். சமீபத்தில் பாலிவுட்டில் தனுஷ், அக்ஷய குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் நடிப்பில் வெளியான அட்ரங்கி ரே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் தனுஷ் தி கிரே மேன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிய தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.
டோலிவுட்டில் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. வாத்தி படத்தை வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் தனுஷின் மொத்தப் படத்துக்கான ஆடைகளுக்கு 7 லட்சத்தில் இருந்து 8 லட்சம் வரை செலவாகியுள்ளது. மற்ற டோலிவுட் நடிகர்களின் ஆடைக்கு கோடிக்கணக்கில் செலவாகும். அதுமட்டுமல்லாமல் மேலும் மேக்கப் மற்றும் பிற அணிகலன்களுக்கு ஒரு கோடி வரை செலவாகும்.
தெலுங்கில் மற்ற நடிகர்களுக்கு செலவாகும் பணத்தில் 10% கூட இல்லாமல் மொத்த படத்துக்கான ஆடையும் தனுஷ் பெற்றுள்ளார். தனுஷின் எளிமையை கண்டு தயாரிப்பாளரும், படக்குழுவினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். இந்த எளிமையே தனுஷின் அசுர வளர்ச்சிக்குக் காரணம் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.