“ஐ! இனிமே ஜாலி தா”…. குறைந்த சம்பளம் பெறுபவர்களுக்கு….. ஜெர்மன் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

ஜெர்மன் நாட்டில், தற்போது குறைந்தபட்ச சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 9.60 யூரோக்கள். இது இந்த வருடத்தில் 12 யூரோக்களாக உயர்த்தப்படவுள்ளது. நாட்டின் புதிய சேன்ஸலர் Olaf Scholz, குறைவான சம்பளத்தை, அதிகரிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். குறைவான சம்பளத்தை பெறும், 10 மில்லியன் மக்களுக்கு இதன் மூலம் பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

எனினும், இந்த திட்டம் படிப்படியாகத்தான் கொண்டுவரப்படும். அதாவது, ஜனவரி முதல் தேதியன்று 9.82 யூரோக்கள் அதிகரிக்கப்பட்டது. அதன் பின்பு, ஜூலை மாதம் முதல் தேதியன்று 10.45 யூரோக்களாக அதிகரிக்கப்படும். அதனைத்தொடர்ந்து இந்த வருட கடைசியில் தான் 12 யூரோக்களாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.