3வது முறையாக ஒரே இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்.. ஏகே 61 படத்தின் அப்டேட்

அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் தற்போது வலிமை ஃபீவரில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வலிமை படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அஜித் நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளார் என்பதும் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இவர்கள் மூவர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாக உள்ள புதிய படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் பூஜை வரும் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. அதோடு இந்த புதிய படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளாராம். அதாவது மங்காத்தா படத்தில் பார்த்த நடித்திருப்பாரே அதுபோன்ற கேரக்டரில் தான் இந்த புதிய படத்தில் நடிக்க உள்ளாராம்.

வலிமை படம் வெளியான பின்னர் இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் படத்தின் பூஜை 16 ஆம் தேதி என குறிப்பிட்டுள்ளார்கள். 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. தற்போது தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தின் பூஜை நடைபெறுமா என்பது சந்தேகமே.