ரேஷன் கடை பொங்கல் பரிசில் பல்லி; மீடியாவுக்கு சொன்னதால் வழக்கு… அவமானம் தாங்காமல் இளைஞர் தற்கொலை!

திருத்தணி அருகே தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு தரமானதாக இல்லை என்பதை ஆதாரத்துடன் ஊடகங்களுக்கு காட்டிய நபர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சரவணப்பொய்கை திருக்கோலம் பகுதியைச் சேர்ந்வர் நந்தன்(65). கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுப்பொருட்களை வாங்கியுள்ளார்.

பொங்கல் பரிசுப் பொருட்களை பிரித்து பார்த்தபோது புளி பாக்கெட்டில் இறந்தநிலையில் பல்லி ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து நியாய விலைக்கடை ஊழியர்களிடம் முறையிட்டபோது அவர்கள் கண்டுக்கொள்ளாததால் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளிடம் நடந்ததை ஆதரத்துடன் எடுத்துக்கூறவே டைம்ஸ் ஆப் இந்தியா சமயம் உட்பட பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக வருவாய்த்துறையினர் விசாரணை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியதாக நந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் நந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் நிம்மதியின்றி மன உளைச்சலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நந்தன் மகன் மகன் குப்புசாமி(35) என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். உடல் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டு அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்‌.

80 சதவீதம் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் சிகிச்சை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் அவதூறு வழக்குப்பதிவு செய்ததால் மனமுடைந்த தற்கொலை செய்துகொண்டதாகவும் அரசின் அலட்சியத்தால், இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் கூறி அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி தலைமையில் திரண்டு அதிமுகவினர் 100க்கும் மேற்ப்பட்டோர் அண்ணா, எம்‌‌ஜி.ஆர்.ஜெயலலிதா சிலைகள் அருகில் இரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்ட காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad