BMW நிறுவனம் அமெரிக்காவில் நடைபெற்ற நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் BMW flow 9 என்னும் ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்போர்ட்ஸ் ரக எலக்ட்ரானிக் கார் பட்டனை அழுத்தினால் நிறம் மாறக்கூடிய தன்மையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது BMW நிறுவனம் காரின் மேல் பகுதியில் எந்தவித கலரையும் பயன்படுத்தவில்லை.
அதற்கு பதிலாக BMW நிறுவனம் ஸ்போர்ட்ஸ் ரக காரின் மேல் பகுதி முழுவதும் body wrap செய்துள்ளது. இந்த body wrap பில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மாறுவதற்கு ஏற்றவாறு சார்ஜ் செய்யப்பட்ட சின்னஞ்சிறிய கேப்ஸ்யூல்கள் பொருத்தப்பட்டுள்ளது.