“மேக்ஸ் சொல்லிக்கொடுக்கும்போது மேல கை வைத்து..’ -ஆறாம் வகுப்பு மாணவிக்கு ஆசைப்பட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சங்கம்விடுதியைச் சேர்ந்த 57 வயதான சீனியப்பா, துவார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்தார் .அவர் அதே பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாடம் எடுத்து வந்தார் .அவர் தன்னிடம் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி மீது ஆசை வைத்தார் .அதனால் அவர் அடிக்கடி அந்த மாணவிக்கு கணக்கு சொல்லிக்கொடுக்கும் சாக்கில் அருகே வரவைத்தார் .பிறகு அவரின் மேல் கை வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார் .இதனால் அந்த மாணவி தன் பெற்றோரிடம் கூறியதும் ,அவர்கள் அங்குள்ள போலீசில் புகார் தந்தார்கள் .இதனால் ஆசிரியர் சீனியப்பாவை ஆலங்குடி மகளிர் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, மாவட்ட எஸ்.பி.,கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். பிறகு கலெக்டர் உத்தரவுப்படி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை, சீனியப்பாவிடம் வழங்கிய போலீசார், அவரை, நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.