பழங்கால கார்களின் அணிவகுப்பு…. பிரம்மிப்பில்பார்வையாளர்கள்…. கோலாகலத்தில் பிரபல நாடு….!!!

இத்தாலி நாட்டில் ஆண்டுதோறும் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அணிவகுப்பு பிரபலமான ‘1000 மிக்லியா’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால கார்களை சேகரிப்பவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதனை தொடர்ந்து 1600 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரசியா மற்றும் ரோம் நகரங்களுக்கு இடையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பினை இந்த ஆண்டு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் புஜேராவில் இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் வளைகுடா நாடுகளை சேர்ந்த 44 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து 2-வது நாளாக நேற்று ராசல் கைமாவின் உயரமான மலைப்பகுதியான ஜெபல் ஜைசிலில் கார் அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.

இந்த அணிவகுப்பை பார்வையிட இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்கள் சீரமைக்கப்பட்டு சாலையில் சென்றது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் 1950-ஆம் ஆண்டில் தொடங்கி 1970-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றுள்ளன. இதனை அடுத்து மலைப்பகுதியில் வளைவுகளில் சென்ற பல்வேறு வண்ணங்களால் ஆன பழங்கால கார்கள் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. இறுதியாக அந்த கார்கள் ஒருவழியாக துபாய் நகரை வந்தடைந்தன. இதனைத் தொடர்ந்து இந்த அணிவகுப்பில் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad