அரசின் திட்டத்தை எதிர்த்து…. நேபாளத்தில் வெடித்த போராட்டம்… கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு…!!!

அமெரிக்கா, நேபாளத்தில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிற்கு மின்தடம் அமைப்பதற்காகவும் சாலைகளை மேம்படுத்துவதற்காகவும் சுமார் 3,700 கோடி நிதி வழங்கியிருக்கிறது. இதனால் 80 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த திட்டங்களை மேற்கொள்ளும் வாரியத்தில் நேபாள அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்திருக்கிறார்கள்.