யாழில் நகரசபை உறுப்பினர்கள் இருவரின் கள்ளக்காதல். பொதுமக்கள் சுற்றிவளைத்து தாக்குதல்!!

பருத்தித்துறை நகரசபை பெண் மற்றும் ஆண் உறுப்பினர்களான கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கில் வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் இன்று மதியம் இந்த சம்பவம் நடந்தது.

கள்ளக்காதலர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

42 ஆண் நகரநபை உறுப்பினரும், 36 வயதான பெண் நகரசபை உறுப்பினருமே திருமணத்திற்கு புறம்பான கள்ளக்காதலில் ஈடுபட்டு, குடும்பங்களை விட்டு ஓடிச் சென்றுள்ளனர்.

ஆண் பிரதேசசபை உறுப்பினருக்கு க.பொ.த உயர்தரம் கற்கும் மகனும், பெண் பிரதேசசபை உறுப்பினருக்கு தரம் 9 படிக்கும் பிள்ளயும் உள்ளனர்.

இருவருக்குமிடையில் தொடர்பு இருப்பதாக அரசல் புரசலாக பேச்சிருந்த நிலையில், இருவரும் நேற்று மாலை முதல் காணமல்ப் போயிருந்தனர். அவர்களை இரண்டு குடும்பத்தாரும் தேடி வந்தனர். பருத்தித்துறை பொலிசிலும் முறையிடப்பட்டிருந்தது.

அவர்கள் மணற்காட்டில் வீடொன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உறவினர்கள் இன்று மதியம் வீட்டை முற்றுகையிட்டனர். இருவரும் நையப்புடைக்கப்பட்டு, பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இருவரும் சேர்ந்த வாழ முடிவெடுத்தே ஓடிச் சென்றதாக தெரிய வருகிறது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad